அர்த்தநாரீஸ்வரர் கதை | Arthanareeswarar Story in Tamil
பிருங்கி என்ற முனிவர் சிவபெருமானை மட்டுமே வழிபடுபவராக இருந்தார்…கைலாயத்தில் பார்வதி தேவி அருகிலேயே இருந்தாலும் அவர் தேவியை வழிபடுவது இல்லை… இதனால் அம்பாளுக்கு வருத்தம் ஏற்பட்டது…
இதை ப்ருங்கிக்கு உணர்த்த விரும்பிய சிவபெருமான் முனிவர் வளம் வரும்போது தேவியின் அருகில் நெருங்கி அமர்ந்தார்… ஆனால் முனிவரோ வண்டு வடிவம் எடுத்து இருவரின் இடையே புகுந்து சிவனை மட்டும் சுற்றி வந்தார்… இதனால் சிவன் அம்பாளுக்கு தன உடலின் இடப்பாகத்தைக் கொடுத்து “அர்த்தநாரீஸ்வரர் ” ஆனார்… தன் தவறை உணர்ந்த முனிவர் அன்று முதல் அம்பாளையும் வலம் வரத் துவங்கினார்…