காமிகா ஏகாதசி | Kamika Ekadasi Story

காமிகா ஏகாதசி | Kamika Ekadasi Story

Kamika Ekadhasi – Purest of all days and most powerful for burnings sins.

சிராவண மாதம்,கிருஷ்ண‌பட்சத்தில் வரும்ஏகாதசி திதியை காமிகாஏகாதசியாக கொண்டாடுவர். (As per solar calendar it is falling on Ashada month end) காமிகா ஏகாதசியின் விரதமகிமையை நாம் காண்போம்

மஹான்களைப் போன்றுபுண்ணியசீலரான யுதிஷ்டிரமஹாராஜா ஸ்ரீ கிருஷ்ணரிடம் – ” மேலான பரம்பொருளே !ஆஷாட மாத சுக்லபட்சத்தில்வரும் புண்ணிய திதியானதேவசயனி ஏகாதசியைப்பற்றியும், அந்நாளில் ஏகாதசிவிரதத்தை கடைப்பிடிப்பதால்கிட்டும் ஒப்பற்ற பலன்களைபற்றியும் அறிந்து கொண்டேன்.

இப்பொழுது காமிகா ஏகாதசி திதியைப்பற்றிய விவரங்களைஅறிந்து கொள்ளவிரும்புகிறேன். ஆகையால்கோவிந்தா, என் மீது கருணைகொண்டு, அந்த ஏகாதசியின்பெருமைகளை விரிவாகசொல்லுங்கள். முதன்மையானதெய்வமே, வாசுதேவா!, எனதுபணிவான நமஸ்காரங்களைதங்களது திருப்பாதங்களில்சமர்ப்பிக்கிறேன்” என்றுகூறினார்.

ஸ்ரீ கிருஷ்ணர் அதற்குபதிலளிக்கையில் – ” தர்மத்தைஎந்நிலையிலும் விடாதுகாக்கும் யுதிஷ்டிரா, ஒருவனதுபாபங்களை எல்லாம் அழித்துசுபவிளைவுகளை ஏற்படுத்தும்ஏகாதசி உபவாசத்தின்மகிமையை சொல்கிறேன்.கவனமாக கேள்.” என்றுகூறிவிட்டு பின்வருமாறுகூறலாயினார்.

“ஒரு முறை, நாரத ரிஷியும்பிரம்மாவிடம் இந்தஏகாதசியின் மஹாத்மியத்தைபற்றி எடுத்துச்சொல்லுமாறுகேட்டுக் கொண்டார். நாரதர்தனது தந்தையான பிரம்மாவைநோக்கி – “தண்ணீரில் பிறக்கும்தாமரை மலரின் மீது, அரசன்சிம்மாசனத்தில்அமர்ந்திருப்பதை போல் காட்சிஅளிப்பவரே, அனைத்துஉயிர்களையும் படைக்கும்வல்லமை பெற்றவரே,மைந்தனானஎனக்கு காமிகா ஏகாதசி திதிப்புண்ணிய தினத்தன்று வழிபடவேண்டிய கடவுளைப் பற்றியும்,கடைப்பிடிக்க வேண்டிய விரதவழிமுறைகளையும்,விரதத்தைமேற்கொள்ளுவதால் கிட்டும்நற்பலன்களையும் விரிவாகஎடுத்துச் சொல்லுங்கள் என்றுவேண்டிக் கொண்டார்.

பிரம்மா அதற்குபதிலளிக்கையில் – ” என்அருமை மகனே, நாரதா !இவ்வுலகத்தின் நலனுக்காக நீதெரிந்து கொள்ள விரும்பியஅனைத்தை பற்றியும் உனக்குவிரிவாக எடுத்துச்சொல்லுகிறேன். கவனமாககேள். . காமிகா ஏகாதசியின்மஹத்துவம் சொல்லில்அடங்காதது.

இவ் ஏகாதசியின்மஹாத்மியத்தை வெறும்காதால் கேட்பவர்களே,அஸ்வமேதயாகம் நடத்தியபலனை பெறுவர் என்றால்இதன் பெருமையை நாம்உணர்ந்து கொள்ளலாம்.

சங்கு, சக்கரம், கதை, தாமரைஆகிய நான்கு திவ்யஆயுதங்களையும் தன் நான்குதிருக்கரங்களில் ஏந்திகதாதாரன் என்னும் திருநாமத்தாலும், ஸ்ரீதரன், ஸ்ரீ ஹரி,ஸ்ரீ விஷ்ணு, மாதவன்,மதுசூதனன் என்னும் மற்ற திருநாமங்களாலும் போற்றப்படும்மஹாவிஷ்ணுவைவணங்குவோருக்கும், அவரதுபாதாரவிந்தங்களே சரணாகதிஎன்று தியானிப்போருக்கும்நிச்சயமாக பெரும்நற்பலன்கள்கிட்டும். காமிகா ஏகாதசியன்றுமஹாவிஷ்ணுவிற்குசெய்யப்படும் பூஜை, ஆராதனைஆகியவை ஒருவருக்கு,புண்ணிய க்ஷேத்ரமானகாசியின் கங்கையில் நீராடுதல்,நைமிசாரண்ய வனத்தில் நீராடிவழிபடுதல் அல்லது புவியில்என்னை மூலவராக கொண்டபுஷ்கர திருத்தலத்தில் நீராடிவழிபடுதல் ஆகியவற்றினால்கிடைக்கக்கூடிய அருளாசிகளைவிட பன்மடங்கு மேலானபுண்ணியத்தையும்,அருளையும் பெற்றுத்தரக்கூடியது.

பனி சூழ் இமாலயத்தில்அமைந்துள்ள கேதார்நாத்சென்று, பிரபு கேதாரநாதரின்தரிசனம் அல்லது சூரியகிரகணத்தின் போதுகுருக்ஷேத்ரத்தில் புண்ணியநீராடுதல் அல்லது பூமியைத்தானமாக அளிப்பதால் கிட்டும்புண்ணிய பலன், அல்லதுபூஜைக்குரிய விஷ்ணுமூர்த்திகளாக கருதப்படும்சாளிக்கிரமங்களை தன்னகத்தேகொண்ட தெய்வீக நதியானகண்டகீ நதியில் நீராடுதல்,அல்ல‌து சிம்மராசியில் குருபகவான் கோட்சாரம் செய்யும்காலம், சோமவார பூர்ணிமாதினத்தன்று, கோதாவரி நதியில்நீராடுதல், இவைஅனைத்தையும் செய்வதால்கிட்டும் நற்பலனை விட காமிகா ஏகாதசி விரதத்தைஅதற்குரிய வழிமுறைப்படிமேற்கொள்ளுவதுடன், அன்றுபகவான் ஸ்ரீகிருஷ்ணனைஆராதனையுடன் வழிபடுவதுமிக அதிக நற்பலன்களைஅருளும்.

காமிகா ஏகாதசி விரதத்தைகடைப்பிடிப்பதால் கிடைக்கும்நற்பலனானது, பால் சுரக்கும்பசுவை கன்றுடனும்,தீவனங்களுடனும் தானமாகஅளிப்பதால் கிடைக்கும்நற்பலனுக்கு சமமானது.

சுபமான காமிகா ஏகாதசிதினத்தன்று ஸ்ரீதரன் என்னும்திருநாமத்தைக் கொண்டமஹாவிஷ்ணுவைவணங்குபவரின் பக்தியைதேவர்களும், கந்தர்வர்களும்,நாகர்களும், பந்நாகர்களும்மெச்சுவர்.

கடந்த பிறவியின் பாபங்களைக்கண்டு அஞ்சுபவரும்,இப்பிறவியில் பாபங்களைவிளைவிக்கும் ஆதாயகரமானவாழ்க்கையில் மூழ்கிஇருப்பவரும், தங்களால்இயன்ற அளவிற்கு இந்தகாமிகா ஏகாதசி விரதத்தைஅனுஷ்டித்து தம்பாபங்களிலிருந்து விடுதலைபெறலாம்.

காமிகா ஏகாதசி தினமானதுஅனைத்து தினங்களையும் விடமிகவும் பவித்ரமான நாளாகும்.ஆகையால் அன்று விரதம்மேற்கொள்ளுதல் அனைத்துபாபங்களையும் அழிக்கும் சக்திகொண்டதாக உள்ளது.

நாரதா! ஸ்ரீ ஹரியே இந்தஏகாதசி தினத்தைப் பற்றி கூறும்போது, ” காமிகா ஏகாதசியன்றுவிரதத்துடன் உபவாசம்இருப்பதால் கிட்டும்புண்ணியம், பக்திஇலக்கியங்கள் அனைத்தையும்படிப்பதால் கிட்டும்புண்ணியத்தை விட பன்மடங்குமேலானது” என்றுஅருளியுள்ளார்.

காமிகா ஏகாதசியன்று விரதவழிமுறைகளின் படி உபவாசம்இருந்து, இரவில் கண்விழித்துஸ்ரீ மஹாவிஷ்ணுவின்மகிமையை விளக்கும்புராணங்களை பாராயணம்செய்பவர் யமதர்மராஜனின்கோபத்துடன் ஒரு போதும்ஆளாக மாட்டார்.

பவித்ரமான காமிகா ஏகாதசிதினத்தன்று உபவாசத்துடன்விரதத்தை கடைப்பிடிப்பவர்தன் பிறப்பு இறப்பு என்னும்மாயசக்ரத்திலிருந்து விடுபட்டுமறுபிறப்பில்லா நிலையைஅடைவர் என்பது நிச்சயம். கடந்த காலத்திலும், நிறையதவசிகளும், யோகிகளும் இந்தகாமிகா ஏகாதசி தினத்தன்றுவிரதம் மேற்கொண்டு மிகஉயர்ந்த ஆன்மீக நிலையினைஅடைந்துள்ளனர். ஆகவே,அவர்கள் காட்டிய நல்லவழியை பின்பற்றி நாமும்அன்று உபவாசம் இருந்துவிரதம் அனுஷ்டிப்பது மிகநல்லது.

அன்று ஸ்ரீ ஹரியை துளசிதளங்களுடன் (இலைகளால்)வணங்குவோர் த‌ம் பாபத்தின்விளைவுகளிலிருந்துவிடுபடுவர்.

மேலும் எப்படி தாமரைஇலையானது தண்ணீரில்இருந்தாலும் தண்ணீருடன்தொடர்பு இல்லாமல்இருக்கிறதோ, அதே போல்,அவர்க‌ள் பாபங்கள் தீண்டாமல்வாழ்வார்.

ஸ்ரீ ஹரிக்கு அன்று பவித்ரமானஒரு துளசி தளத்தை(இலையை) சமர்ப்பித்துபூஜிப்பவர் அடையும்புண்ணியமானது, ஒருவர்இருநூறு கிராம் தங்கம் மற்றும்எண்ணூறு கிராம் வெள்ளியைதானம் செய்வதால் அடையும்புண்ணியத்திற்கு சமமானது.

முத்து, பவளம், மாணிக்கம்,புஷ்பராகம், வைரம்,வைடூரியம், கோமேதகம்போன்ற விலை மதிப்பில்லாதகற்களினால் செய்யப்படும்பூஜையை விட, பவித்ரமானதுளசி இலைகளால்செய்யப்படும் பூஜையானதுபகவான் மஹாவிஷ்ணுவிற்குமிகுந்த ப்ரீதியை அளிக்கிறது.

புதிதாக தோன்றியமலர்களுடன் (மஞ்சரிமொட்டுகள்) கூடிய துளசியைபகவான் கேசவனுக்குசமர்ப்பிப்பவர் இப்பிறவிமட்டுமல்லாது, தன் முந்தைய பிறவியின் பாபங்களும் நீங்கப்பெறுவர்.

மேலும், காமிகா ஏகாதசியன்று துளசி தேவியை தரிசனம்செய்பவர் தம் பாபங்கள் அழியப்பெறுவர். அன்று துளசிதேவியிடம் இருப்பிடமானதுளசி செடியை தொட்டுவணங்குதல், பிரார்த்தனைசெய்தல் ஆகியவைஒருவருடைய நோய்நொடிகளிலிருந்து அவருக்குநிவர்த்தி அளிக்கும்.

அன்று, துளசி செடிக்கு நீர்ஊற்றுபவர் எக்காலத்திலும்யமதர்ம ராஜனைக் கண்டுஅஞ்ச வேண்டியதில்லை.

அன்று துளசி செடியின் சிறிய நாற்றினை நடுபவர் அல்லதுமாற்று நாற்று (பதியன்)செய்பவர், தம் வாழ்நாள்முடிவில் பகவான்ஸ்ரீகிருஷ்ணரின் இருப்பிடத்தைஅடைவர்.

தினமும் துளசி தேவியை பூஜித்து ஆராதித்தால் நமதுபக்தியின் சேவையினால்மோட்சப் பிராப்தியைஅடையலாம்.

துளசி தேவிக்கு தினம்அணையாமல் எரியும் நெய்விளக்கேற்றி பூஜிப்பவரின்புண்ணியக் கணக்கை யமதர்மராஜனின் சித்ரகுப்தனாலும்கணக்கிட இயலாது.பவித்ரமான இந்த காமிகாஏகாதசி தினமானதுபகவானுக்கு மிகவும் பிரியமானநாளாகும். ஆகையால் அன்றுமுன்னோர்கள் அனைவரும்நெய் விளக்கேற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணரை வழிபட்டுஸ்வர்க்கத்தை அடைந்துஅமிர்தத்தை அருந்தும்பாக்கியம் பெற்றனர்.

அன்று, எவரொருவர் நெய்அல்லது எள் எண்ணையினால்(நல்லெண்ணை) விளக்கேற்றிஸ்ரீகிருஷ்ணரை பூஜித்துஆராதிக்கிறாரோ, அவர் தன்பாபங்களிலிருந்து விடுதலைபெற்று, முடிவில் சூரியனின்வாசஸ்தலமானசூரியமண்டலத்தை பத்துமில்லியன் விளக்குகளின்பிரகாசத்திற்கு சமமானபிரகாசமான உடலுடன்அடைவர்.

இந்த ஏகாதசியானது மிகவும்பவித்ரமானது மட்டுமல்லாமல்மிகவும் சக்தி பெற்ற நாளும்ஆகும். இந்நாளில் உபவாசம்இருக்க் இயலாதோர், இங்குகுறிப்பிட்டுள்ளவழிமுறைகளைப்பின்பற்றினாலே, தங்கள்முன்னோர்களுடன் ஸ்வர்க்கம்அடைவர்,” இவ்வாறு பிரம்மதேவர் கூறினார்”.

இதைக் கூறிய‌ ஸ்ரீ கிருஷ்ணர்யுதிஷ்டிரரிடம் — “யுதிஷ்டிரா,மஹாராஜனே, பாவங்களைநீக்கி, எண்ணில்லாதபலன்களை வழங்கும் காமிகாஏகாதசியின் பெருமைகளை,பிரஜாபதி பிரம்மா தனதுபுதல்வன் நாரதருக்குஉரைத்ததை அப்படியே நான்உனக்கு உரைத்துள்ளேன்..

இப்புனித காமிகா ஏகாதசிவிரதமானது பிராமணனைகொன்றதால் உண்டான பாவம்(பிரம்மஹத்தி), கருவில்வளரும் குழந்தையை அழித்தபாவம் போன்ற கொடியபாவங்களிலிருந்து நிவர்த்திஅளிக்கும் பேறு பெற்றது.

இவ்விரதம் அதிகபுண்ணியத்தை அளிக்கவல்லது. எனவே,இவ்விரதத்தைக்கடைபிடிப்போர் பக்தியோகத்தில் சிறந்து விளங்குவர்.

அப்பாவிகளை கொல்வதால்உண்டாகும் பாவங்கள் அதாவதுபிரம்ம ஹத்தி தோஷம், சிசுஹத்தி தோஷம், பக்திமான்மற்றும் களங்கமில்லாதபெண்ணைக் கொன்றபாவங்களின்விளைவுகளிலிருந்து காமிகாஏகாதசியின் மஹாத்மியத்தைகேட்பதால் நிவர்த்தி பெறலாம்.

ஆனால் இதைக் கொண்டுஒருவர் முதலில் கொலைப்பாதகம் புரிந்து விட்டு பின்னர்காமிகா ஏகாதசியின்மஹாத்மியத்தை கேட்பதால்நிவர்த்தி பெறலாம் என்றுநினைக்கக் கூடாது. அதுதவறானது. அறிந்தேகொலைபாதகம் போன்றகொடிய பாவங்களைப்புரிவதற்கு எந்த்சாஸ்திரத்திலும் மன்னிப்பேகிடையாது என்பதைஞாபகத்தில் இருத்தவும். ” -என்றார்.

எவரொருவர் பவித்ரமான இந்தகாமிகா ஏகாதசியின்பெருமையை விவரிக்கும்மஹாத்மியத்தை பக்தியுடனும்,சிரத்தையுடனும,நம்பிக்கையுடனும்கேட்கிறாரோ, அவர் தன்பாபங்களிலிருந்து விடுபட்டுமஹாவிஷ்ணுவின்வாசஸ்தலமானவிஷ்ணுலோகம் எனப்படும்வைகுந்தத்தை அடைவர்.

ப்ரம்ஹ வைவர்த்த புராணம், சிராவண மாத கிருஷ்ண பட்சஏகாதசி அதாவது காமிகா ஏகாதசி என்று அழைக்கப்படும்