நகுஷன்
நகுஷன் என்று ஒரு அரசன் இருந்தான்… இந்திரப் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்தான்… அதைத் தடுக்க நினைத்த இந்திராணி “உமக்கு இந்திரப் பதவி வேண்டுமானால் சப்த ரிஷிகள் சுமக்கும் பல்லக்கில் வரவேண்டும் ” என்றாள்……
சப்த ரிஷிகளும் நகுஷனின் பல்லக்கை சுமந்தனர்… அதில் அகத்தியரும் ஒருவர்…. சீக்கிரம் இந்திர லோகம் சென்று இந்திர பதவியை அடைய வேண்டும் என்ற ஆசையில் சர்ப்ப சர்ப்ப என்றான்…. சர்ப்ப என்றால் சீக்கிரம் என்று ஒரு பொருள்… பாம்பு என்று மற்றொரு பொருள்….
அகத்தியருக்கு கோபம் வந்தது… சர்ப்ப சர்ப்ப என்று சொன்னதால் நீ பாம்பாக மாறுவாய் என்று சபித்தார்…. மிகவும் மனம் வருந்திய மன்னன் மன்னிப்பு கேட்கவும் “எப்போது கிருஷ்ண பகவானின் கால் உன்மீது படுகிறதோ அப்போது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் ” என்று சொன்னார்…
பாம்பாக உருமாறி வட சமுத்திரத்தில் கிடந்தான் நகுஷன்… ஒரு முறை கிருஷ்ணரின் பாதம் அவன் மீது பட சாப விமோசனம் கிடைத்தது… அவனது அகம்பாவமும் ஒழிந்தது… இந்தக் கதை ஸ்ரீமத் பாகவதத்தில் இடம் பெற்றுள்ளது….