யார் உயர்ந்தவர் ? | Story of Navagrahas

யார் உயர்ந்தவர் ? | Story of Navagrahas

ஒரு முறை ஒன்பது க்ரஹங்களும் தமக்குள் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சையில் ஈடுபட்டனர் … எந்த முடிவுக்கும் வர இயலாமல் இந்திரனிடம் சென்று இதே கேள்வியைக் கேட்டனர்… தனக்கு ஏன் வம்பு என்று நினைத்த இந்திரன் விக்ரமாதித்ய மன்னனுக்கே விடை தெரியும் என்று சொல்லி அனுப்பினான்… விக்ரமாதித்யனுக்கும் சற்று குழப்பமாகவே இருந்தது… அரசனின் அரியணைக்கு அருகே இருந்து வாசல் வரை வரிசையாக போடப்பட்டு இருந்த அரியணைகளில் அவர்களை அமரச் சொன்னான்…

விக்ரமனுக்குக்கு அருகில் இருந்த அரியணையில் guru பகவானும், அதற்கு அடுத்து சூரியனும், பிறகு சந்திரனும், புதன், செவ்வாய், ராகு, கேது ,சுக்கிரன் என்ற ரீதியில் அமர்ந்தனர்… வாயிலை ஒட்டி இருந்த அரியணை மட்டுமே காலியாக இருந்தது… அங்கே உட்காருவதை ஏளனமாக நினைத்த சனி பகவான் மிகுந்த கோபம் கொண்டு உட்கார மறுத்தார்… இதைக்கேட்ட மற்ற கிரக தேவர்கள் ஏளனமாக சிரிக்கத் தொடங்கினர்…

இயற்கையிலேயே மிகுந்த கோபம் கொண்ட சனி பகவான் vikraman thannai வேண்டுமென்றே ஏளனம் செய்ததாக நினைத்துஅதற்குண்டான தீவிர தண்டனைகளை அவன் அனுபவிப்பான் என்று சபித்தார்…