துளசிவனம்
துளசி தேவி ஒரு நாள் பெருமாளை வணங்கி ” இலக்குமி தேவி உங்கள் மார்பில் வீற்றிருப்பதைப் போல என்னையும் தடிக்க வேண்டும் ” என்று கேட்டுக் கொண்டாள்…. அதற்க்கு மகாவிஷ்ணு “தேவியே இலக்குமி தேவி முன்பு கடும் தவம் புரிந்து என் மார்பை இடமாகக் கொண்டாள்… அவள் பூமி தேவியின் வடிவம் கொண்டு மண்ணுலகில் மார்கண்டேய முனிவருக்கு புதல்வியாக பிறக்கப் போகிறாள்… அதற்கு முன்பே நீ அந்த முனிவரின் தபோ வனத்திற்கு சென்று செடி உருவில் சிறிது காலம் இருந்தால் சில மாதங்களில் உன் அடியில் பூமி தேவியாக இலக்குமி அவதரிப்பாள்…
யான் அந்த இடத்திற்கு வந்து பூமி தேவியை மணம் புரியும் காலத்தில் உனக்கு பல பெருமைகள் ஏற்படும்… உன் இலைகளால் என்னை பூஜை செய்பவர் செல்வம், தானியம், சகல சத் சம்பத்துக்களும் பெறுவார்…. ஒவ்வொரு துளசி இலை பூஜைக்கும் அசுவமேத யாகத்திற்கு உண்டான பலன் கிடைக்கும்… நீ இருக்குமிடம் துளசிவனம் என்ற திருதுழாயக்காடு அனைவராலும் புனிதமாக கருதப்படும்” என்று வரமளித்தார்…