கடன் பிரச்சினை தீர்க்கும் உப்பு பரிகாரம் | Debt Removal Uppu Pariharam

கடன் பிரச்சினை தீர்க்கும் உப்பு பரிகாரம் | வீட்டிலியே செய்யலாம் கடன் தீர்க்கும் உப்பு பரிகாரம்?

செவ்வாய்கிழமை பரிகாரம்:

கடன்பிரச்சினை தீர செவ்வாய்கிழமை செவ்வாய் ஹோரையில் பரிகாரம் செய்யலாம்.

  • செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணியில் இருந்து 7.00 மணிவரை செவ்வாய் ஹோரை.
  • இதேபோல் செவ்வாய்க்கிழமை மதியம் 1.00 மணியிலிருந்து 2.00 மணி வரை செவ்வாய் ஹோரை அதே போல இரவு 8 மணி முதல் 9 மணி வரைக்கும் செவ்வாய் ஹோரை வருகிறது.
  • உங்கள் வீட்டு பூஜையறையில் மகாலட்சுமியையும் குல தெய்வத்தையும் நினைத்து தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.
  • அதன் பின்பு 3 கை பிடி அளவு கல்லுப்பு தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • புதிய கல் உப்பு பாக்கெட் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் வாங்கிவைத்துக்கொள்வது நல்லது.
  • ஒரு செவ்வாய்க் கிழமை அன்று பூஜை அறையில் அமர்ந்து ஒரு மஞ்சள் நிறத் துணியில் 3 முறை உங்களுடைய உள்ளங்கை நிரம்ப கல்லுப்பைக் கிண்ணத்திலிருந்து எடுத்து அந்த மஞ்சள் துணியில் வைக்க வேண்டும்.
  • மூன்று கைப்பிடி கல் உப்பை, உங்கள் கைகளால் எடுக்கும்போதும் ‘கடன் சுமை கரைந்து போக வேண்டும் பணப்பிரச்சனை தீர வேண்டும்.’ இவ்வாறாக மனதார பிரார்த்தனை செய்துகொண்டு, அந்த மஞ்சள் துணியில் உப்பை வைத்து, ஒரு முடிச்சுப் போட்டு கட்டி இந்த முடிச்சை மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் வைத்து விடவேண்டும்.
  • ஒரு வாரம் வரை கல் உப்பை உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்திருங்கள். மறு வாரம் வரக்கூடிய செவ்வாய்கிழமையில் செவ்வாய் ஓரையில், பூஜை அறையில் இருக்கக்கூடிய கல் உப்பை எடுத்து சுத்தமான தண்ணீரில் போட்டு கரைக்க வேண்டும்.
  • குறிப்பாக மஞ்சள் துணியில் கட்டி இருக்கும் கல் உப்பை உங்களுடைய உள்ளங்கைகளால் எடுத்து மூன்று முறை தண்ணீரில் போட்டு உங்கள் கடன் கரைய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே கரையுங்கள்.
  • உப்பை கரைத்து இந்த தண்ணீரை கால்படாத இடத்தில் விட்டு விடுங்கள். இந்த பரிகாரத்தை செய்தால் எவ்வளவு பெரிய கடனும் தண்ணீரில் கரைத்த உப்பு போல சீக்கிரம் கரைந்து போகும்.