திருமண தடை நீங்க ஆண்களுக்கான பரிகாரம் | Thirumana Thadai Neenga

திருமண தடை நீங்க ஆண்களுக்கான பரிகாரம்:

திருமண வயது வந்தும் திருமணம் ஆகாமல் தடைப்பட்டு கொண்டிருக்கும் ஆண்களுக்கு அவர்களுடைய ஜாதகத்தில் அமைந்துள்ள கிரகங்கள் ஏற்படுத்தும் தோஷங்கள் காரணமாக திருமணம் நடைபெறுவதில் தாமதம் தடங்கல்கள் ஏற்படக்கூடும்.

ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் காரணமாகவோ அல்லது ஏதாவது ஒரு காரணத்தினாலோ திருமணம் தடைப்பட்டு கொண்டிருக்கும். அவ்வாறு திருமணத்தடை நீங்க ஆண்கள் செய்ய வேண்டிய பரிகாரம் என்னவென்பதைப் பற்றி பார்ப்போம்.

 • ஒரு வெள்ளிக்கிழமையன்று காலையில் குளித்து முடித்த பின், உடல், மன தூய்மையுடன்
  • 7 – சந்தனக்கட்டிகள்,
  • 7 – லவங்கம்,
  • 7 – பூணூல்,
  • 7 -கற்கண்டு,
  • 7 -நாணயம்
  • 7 -வெள்ளை மலர் (மல்லிகை, வெண் தாமரை)
  • அரிசி -70 கிராம்,
  • வெள்ளைத்துணி – 70 செ.மீ
 • ஆகிய பொருட்களை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 • பிறகு பூஜை அறையில் சிவனும்பார்வதி தேவியும் திருமண கோலத்தில் இருக்கும் போட்டோ அல்லது படத்தின் முன்பு வைத்துதனக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற திருமணத்தடைகளை நீக்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று மனதிற்குள் வேண்டிக் கொள்ள வேண்டும்.
 • பிறகு மனதிற்குள் ஒரு குறிப்பிட்ட தொகையை காணிக்கையாக அளிப்பதாக வேண்டி கொள்ள வேண்டும். பிறகு அனைத்துப் பொருட்களையும்வேண்டிக் கொண்ட காணிக்கை தொகையையும் ஒரு வெள்ளைத்துணியில் வைத்து மூட்டைக் கட்டியாருக்கும் தெரியாத மறைவிடத்தில் வைத்து விட வேண்டும்.
 • சிவனையும் பார்வதி தேவியையும் தொடர்ந்து 40 நாட்களும் தன்னுடைய கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று வேண்டி வழிபட்டு வர வேண்டும்.
 • 40ம் நாள் காலையில் குளித்து முடித்து பின் சிவனும்பார்வதி தேவியும் எழுந்தருளியுள்ள ஆலயத்திற்கு சென்று வழிபட்டுபூஜையில் வைத்த பொருட்களையும் காணிக்கைத் தொகையையும் அந்த கோவில் இருக்கும் பூசாரிக்கு தானமாக கொடுக்க வேண்டும்.
 • இவ்வாறு செய்தால் ஆண்களுக்கு ஏற்படும் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.