2023 சனிபெயர்ச்சி | கடக ராசிக்கான பலன்கள் | 2023 Sani Peyarchi Palankal

வரும் சுபகிருது ஆண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி தை 3ஆம் தேதி அதாவது 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். அதே போல் 2023ஆம் ஆண்டு பங்குனி மாதம் 15ஆம் நாளான மார்ச் மாதம் 29ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படியும் சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.

சனிப்பெயர்ச்சி:

சூரிய பகவானின் புத்திரரான சனி பகவான் நம் வாழ்வில் நாம் செய்யும் நற்செயல்கள், தீய செயல்களுக்கு ஏற்றார் போல் நன்மை தீமைகளை வழங்கக்கூடியவர். சனியானவர் கும்ப ராசியான தனது ஆட்சி வீட்டில் நின்று தான் நின்ற நிலைக்கு ஏற்ப பல சுபச்செயல்களை இனி வருகின்ற இரண்டரை ஆண்டுகள் அளிக்கவுள்ளார்.

சனி தான் நின்ற ராசியிலிருந்து, மூன்றாம் பார்வையாக மேஷ ராசியான ஜென்ம ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான புத்திர ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான அஷ்டம ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

கடக ராசி அன்பர்களே!

கடக ராசிக்கு ஏழாமிடத்தில் இருந்து வந்த சனிபகவான் எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைய இருக்கின்றார்.

பலன்கள்

சனி தன்னுடைய மூன்றாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தை பார்ப்பதினால் எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். இளைய சகோதர வழியில் சுப விரயங்கள் ஏற்படும். எதிலும் திருப்தியற்ற மனநிலை உண்டாகும். வெளிவட்டாரங்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அரசு தொடர்பான துறைகளில் புதுவிதமான சூழல் உண்டாகும்.

சனி தன்னுடைய ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதினால் பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. தனம் தொடர்பான விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படவும்.

தவிர்க்க வேண்டிய விஷயங்கள்:

மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பது மற்றும் முன்ஜாமீன் தொடர்பான விஷயங்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்களில் அலைச்சலுக்கு பின்பே எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பேச்சுக்களில் முன்கோபத்தை குறைத்து கொள்வது நல்லது.

சனி தன்னுடைய பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான புத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானத்துடன் செயல்படுவது நன்மை பயக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகளில் நிபுணர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தும்.

எதிர்பாலினத்தவர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். நெருங்கிய உறவுகளால் சில விரயங்கள் உண்டாகும். குழந்தைகளின் ஆரோக்கியம் நிமிர்த்தமான விஷயங்களில் கவனம் வேண்டும். இழுபறியாக இருந்துவந்த பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

நிதானம் தேவை:

சனி ராசிக்கு எட்டாம் பாவகத்தில் அமர்ந்திருப்பதினால் திடீர் பணவரவு கிடைக்கும். வாகன போக்குவரத்துகளில் நிதானம் வேண்டும். உங்களின் மீது சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது தோன்றி மறையும். எண்ணிய சில காரியங்கள் கைகூடி வரும் நேரத்தில் விலகிப்போகும் சூழ்நிலைகள் உருவாகலாம். பயணங்களின்போது சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.

பழக்க வழக்கங்களில் மாற்றமான சூழல் உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தமான ஆவணங்களை மற்றவர்களிடத்தில் கொடுக்காமல் நீங்களே வைத்து கொள்வது சாலச் சிறந்தது. கடின உழைப்பிற்கு உண்டான பலன்கள் எள்ளளவில் கிடைக்கும். சூழ்நிலைகள் மாறினாலும் முடிவுகள் சாதகமாக அமையும்.

உறவினர்களுக்கிடையே சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்வது உறவினை மேம்படுத்தும். உடனிருப்பவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்த்து கொள்ளவும்.

மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் பதற்றமின்றி செயல்படவும். பெற்றோர்களின் பேச்சுக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். பணி மாற்ற செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

வர்த்தக செயல்பாடுகளில் துறைசார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று மேற்கொள்வது அவசியமாகும். வியாபாரம் நிமிர்த்தமான அரசு சார்ந்த உதவிகள் கிடைப்பதில் அலைச்சல்களுக்கு பின்பே அனுகூலம் உண்டாகும்.

பொருளாதாரம்

பொருளாதார நிலையில் நெருக்கடியான சூழல் உண்டாகும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். ஜாமீன் தொடர்பான செயல்பாடுகளை தவிர்ப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கொடுக்கல், வாங்கலில் அலைச்சல்கள் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்திலும், செயல்பாடுகளிலும் ஒருவிதமான சோர்வும், மந்தநிலையும் ஏற்பட்டு நீங்கும். சரியான நேரத்திற்கு உணவுகளை உட்கொள்வது நல்லது. முகத்தில் தோற்றப்பொலிவுகள் மேம்படும். அவ்வப்போது கால்களில் லேசாக வீக்கம் ஏற்படும். கைகளில் அரிப்பு தன்மை உண்டாகும். வெளி இடங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. காரமான உணவுகள் மற்றும் பற்களில் அகப்படும் உணவுகளை இரவு நேரங்களில் உண்பதை தவிர்ப்பது நல்லது.

நன்மைகள்

நடைபெற இருக்கின்ற சனிப்பெயர்ச்சியில் செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும். மனதில் நேர்மறை சிந்தனைகள் உண்டாகும். மேலும் புதிய துறை சார்ந்த தேடல்கள் மற்றும் தொழில் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும்.

கவனம்

நடைபெற இருக்கின்ற சனிப்பெயர்ச்சியில் பொன், பொருள்களை கையாளும்போது கவனத்துடன் செயல்படவும். உயர்கல்வி சார்ந்த செயல்களில் தன்னிச்சையான முடிவுகள் எடுப்பதை தவிர்த்து ஆசிரியர்களின் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். வியாபார பணிகளில் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது மேன்மையை உருவாக்கும்.

வழிபாடு

சனிக்கிழமைதோறும் அனுமனை வழிபட இன்னல்கள் குறையும். திருச்செந்தூர் முருகரை வழிபட சிந்தனைகளில் தெளிவும், ஆதரவான சூழலும் உண்டாகும்.

பொதுப்பலன்களான இவற்றில் திசாபுத்திக்கு ஏற்ப மாற்றம் உண்டாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.