2023 சனிபெயர்ச்சி | சிம்மம் ராசிக்கான பலன்கள் | 2023 Sani Peyarchi Palankal

வரும் சுபகிருது ஆண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி தை 3ஆம் தேதி அதாவது 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். அதே போல் 2023ஆம் ஆண்டு பங்குனி மாதம் 15ஆம் நாளான மார்ச் மாதம் 29ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படியும் சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.

சூரிய பகவானின் புத்திரரான சனி பகவான் நம் வாழ்வில் நாம் செய்யும் நற்செயல்கள், தீய செயல்களுக்கு ஏற்றார் போல் நன்மை தீமைகளை வழங்கக்கூடியவர். சனியானவர் கும்ப ராசியான தனது ஆட்சி வீட்டில் நின்று தான் நின்ற நிலைக்கு ஏற்ப பல சுபச்செயல்களை இனி வருகின்ற இரண்டரை ஆண்டுகள் அளிக்கவுள்ளார்.

சனி தான் நின்ற ராசியிலிருந்து, மூன்றாம் பார்வையாக மேஷ ராசியான ஜென்ம ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான புத்திர ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான அஷ்டம ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.

சிம்ம ராசி அன்பர்களே!

சிம்ம ராசிக்கு ஆறாமிடத்தில் இருந்துவந்த சனி பகவான் ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைய இருக்கின்றார்.

பலன்கள்

சனி தன்னுடைய மூன்றாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதினால் புதிய துறை சார்ந்த தேடல்களும் உற்சாகமும் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். முயற்சிகளில் புதிய அனுபவமும், புதுமையான சூழ்நிலைகளும் காணப்படும்.

தொலை தூர புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் செல்வாக்கு மேம்படும். நவீன தொழில்நுட்ப கருவிகளின் மூலம் மேன்மை அடைவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

சனி தன்னுடைய ஏழாம் பார்வையாக சிம்ம ராசியான ஜென்ம ஸ்தானத்தை பார்ப்பதினால் எந்தவொரு செயலிலும் சிந்தித்து செயல்படுவீர்கள். குழப்பமான சில செயல்களில் தெளிவான முடிவும், மனதை ஒருமுகப்படுத்தும் தன்மையும் அதிகரிக்கும். தோற்றப்பொலிவில் சில மாற்றம் ஏற்படும்.

நண்பர்கள் வழியில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். சில நேரங்களில் எளிமையான பணிகளும் கடுமையாக தெரியும். மனதளவில் இருந்துவந்த தயக்க உணர்வுகள் குறையும். செயல்பாடுகளில் விவேகமும், பொறுமையும் அதிகரிக்கும். எதிலும் ஆர்வமின்மையான சூழ்நிலைகள் உண்டாகும்.

சனி தன்னுடைய பத்தாம் பார்வையாக விருச்சிக ராசியான சுக ஸ்தானத்தை பார்ப்பதினால் விருந்து கேளிக்கைளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும்.  வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

பழைய இடங்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சொத்துகள் தொடர்பான விவகாரத்தில் இருந்துவந்த வில்லங்கம் படிப்படியாகக் குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். 

சனி ராசிக்கு ஏழாம் பாவகத்தில் அமர்ந்திருப்பதினால் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய நபர்களின் தன்மைகளை அறிந்து பழகுவது நல்லது. வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

கடன் சார்ந்த பிரச்சனைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவீர்கள். எதிர்பாராத இடமாற்றங்கள் சிலருக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும். எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாகக் கிடைக்கும்.

தம்பதியருக்குள் நீங்களே விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டிய சூழ்நிலைகள் அமையும். மனதிற்கு நெருக்கமானவர்கள் குடும்பத்தில் இணைவதற்கான சூழ்நிலைகள் சிலருக்கு உண்டாகும்.

மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான விஷயங்களில் ஆசிரியர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு கல்வியில் அவ்வப்போது ஏற்படும் மறதி சார்ந்த இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும்.

அலுவலகத்துக்கு செல்லும் நேரங்களில் சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு அலுவலகங்களில் கடன் சார்ந்த உதவிகள் ஏற்படும்.

மனை தொடர்பான தொழிலில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்படவும். சீருடை தொடர்பான அரசு பணிகளில் ஓய்வின்றி பணியாற்ற வேண்டிய சூழ்நிலைகள் அமையும்.

பொருளாதாரம்

தடைபட்ட தனவரவுகள் சிலருக்கு கிடைக்கும். ஞாபக மறதியினால் ஒரு சில இழப்புகள் நேரிடலாம். பணம் கொடுக்கல், வாங்கலை தவிர்ப்பது மேன்மையை ஏற்படுத்தும். பண விவகாரங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்ளவும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து பொருளாதார உதவிகளை மேற்கொள்ளவும்.

உடல் ஆரோக்கியம்

தூக்கமின்மை தொடர்பான பிரச்சனைகள் குறையும். தேவையற்ற சிந்தனைகளும் கற்பனைகளும் ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் அலட்சியத்தை காட்டாமல் ஆலோசனைகளை பெற்று செயல்படவும்.

நன்மைகள்

நடைபெற இருக்கின்ற சனிப்பெயர்ச்சியில் செயல்பாடுகளில் புதிய மாற்றம் பிறக்கும். மேலும் மனதளவில் இருந்துவந்த இனம் புரியாத அச்சம் மற்றும் கவலைகள் நீங்கும். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அதிகரிக்கும்.

கவனம்

நடைபெற இருக்கின்ற சனிப்பெயர்ச்சியில் எதிலும் தனித்து செயல்படுவதற்கான சூழ்நிலைகளும் வாய்ப்புகளும் உண்டாகும். பயணம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். தந்தை வழி உறவுகளிடம் அவ்வப்போது சிறு சிறு மனக்கசப்புகள் தோன்றி மறையும்.

வழிபாடு

சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபட மன ஒருமைப்பாடு அதிகரிக்கும். ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரரை வழிபட சிந்தனைகளில் தெளிவும், செயல்பாடுகளில் எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும்.

பொதுப்பலன்களான இவற்றில் திசாபுத்திக்கு ஏற்ப மாற்றம் உண்டாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.