நோயற்ற வாழ்வு குறையற்ற செல்வமும் | Noyatra Vaazhvu Kuraiyatra Selvamum

நோயற்ற வாழ்வு குறையற்ற செல்வமும்
நூற்றாண்டு புகழும் தூற்றாத மனமும்
நேயர்கள் பெற்றுள்ள தாயே எங்கள் கருமாரி
நீயே அருள்புரிவாய் நிமலியே ஈசன் கமலியே தேவி (கரு)

காலத்தின் அருளம்மா கருமாரி அம்மா
கைதொழும் அன்பர்கள் மெய்புகழ் எய்திட
மூலப் பொருளாக ஞானம் கனியவரும்
மோகன தெய்வமே ஆவன தேவியே (காலத்)

மின்னும் கதிரொளி உன் மேனியின் உதயமம்மா
மலரும் தாமரையில் தெரியும் உன் இதயமம்மா
உன்னருள் நலத்தாலே உயிர் வாழ்வேன் அம்மா
உமயவளே இமயவள் திருமகளே தாயே