வேப்ப மரத்தடியில் வீற்றிருக்கும் மாரியம்மா
கேட்ட வரம் அளிப்பாள் கிராமத்து காளியம்மா
மஞ்சளிலே குளித்திருப்பாள் குங்குமத்தில் சிரித்திருப்பாள்
நெஞ்சில் நிறைஞ்சிருப்பா நீலி மகமாயி அம்மா
ஆனந்த ஞான ரதம் ஏறிவந்தாள் மாரி
ஆடிடுவோம் பாடிடுவோம் ஆலயத்தில் கூடி
அம்மன் புகழ்பாடி எங்கள் அம்மன் புகழ்பாடி
ஆவணியில் அவதரிச்சா காளி மகமாயி
வேலப்பன் சாவடியில் வேற்காட்டு மாரி
பாம்பாக உருவெடுத்தா பார்வதியாம் தேவி
பவுர்ணமியில் பால் நிலவில் படமெடுத்து ஆடி (ஆனந்த)
வேலாயுதத் தீர்த்தம் அது நோயாளியை தேத்தும்
வேப்பிலையின் வாசம் பல வியாதிகளை ஓட்டும்
எலுமிச்சம் பழத்தினிலே இருக்கும் மகமாயி
எமனுக்கும் எமனாவாள் எங்கள் கருமாரி
ஆயிரம் கண் அம்பிகையின் ஆராதனை பாரு
ஆலால சுந்தரியின் கோலாகலம் ஜோரு
அங்காள பரமேஸ்வரி சங்க நாதம் கேளு
ஆலயம்மன் கோவிலிலே காவடி நீ ஆடு (ஆனந்த)