Navarathri Songs – கருணை தெய்வமே கற்பகமே

கருணை தெய்வமே கற்பகமே
காணவேண்டும் உந்தன் பொற்பதமே என் (கருணை)

உறுதுணையாக என் உள்ளத்தில் அமர்ந்தாய்
உன்னையன்றி வேறு யாரோ எம் தாய் (கருணை)

ஆனந்த வாழ்வு அளித்திட வேண்டும்
அன்னையே எம்மேல் இரங்கிட வேண்டும்
நாளும் உன்னைத் தொழுதிடல் வேண்டும்
நலமுடன் வாழ அருளல் வேண்டும் (கருணை)