திருப்புகழ் பாடல் 16 – Thiruppugazh Song 16 – கரிக்கொம்பந் தனித்த: Kari Kombanthaniththa

திருப்புகழ் பாடல் 41 – திருச்செந்தூர்

தனத்தந்தம் தனத்தந்தம்
தனத்தந்தம் தனத்தந்தம்
தனத்தந்தம் தனத்தந்தம் …… தனதானா

கரிக்கொம்பந் தனித்தங்கங்
குடத்தின்பந் தனத்தின்கண்
கறுப்புந்தன் சிவப்புஞ்செம் …… பொறிதோள்சேர்

கணைக்கும்பண் டுழைக்கும்பங்
களிக்கும்பண் பொழிக்குங்கண்
கழுத்துஞ்சங் கொளிக்கும்பொன் …… குழையாடச்

சரக்குஞ்சம் புடைக்கும்பொன்
றுகிற்றந்தந் தரிக்குந்தன்
சடத்தும்பண் பிலுக்குஞ்சம் …… பளமாதர்

சலித்தும்பின் சிரித்துங்கொண்
டழைத்துஞ்சண் பசப்பும் பெண்
தனத்துன்பந் தவிப்புண்டிங் …… குழல்வேனோ

சுரர்ச்சங்கந் துதித்தந்தஞ்
செழுத்தின்பங் களித்துண்பண்
சுகத்துய்ந்தின் பலர்ச்சிந்தங் …… கசுராரைத்

துவைத்தும்பந் தடித்துஞ்சங்
கொலித்துங்குன் றிடித்தும்பண்
சுகித்துங்கண் களிப்புங்கொண் …… டிடும்வேலா

சிரப்பண்புங் கரப்பண்புங்
கடப்பந்தொங் கலிற்பண்புஞ்
சிவப்பண்புந் தவப்பண்புந் …… தருவோனே

தினைத்தொந்தங் குறப்பெண்பண்
சசிப்பெண்கொங் கையிற்றுஞ்சுஞ்
செழிக்குஞ்செந் திலிற்றங்கும் …… பெருமாளே.