திருப்புகழ் பாடல் 3 – விநாயகர்
ராகம் – ஹம்ஸத்வனி / ஆனந்தபைரவி; தாளம் – அங்கதாளம் (8)
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதிமிதக-3
தந்ததனத் தானதனத் …… தனதான
உம்பர்தருத் தேநுமணிக் …… கசிவாகி
ஒண்கடலிற் றேனமுதத் …… துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் …… பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் …… றருள்வாயே
தம்பிதனக் காகவனத் …… தணைவோனே
தந்தைவலத் தாலருள்கைக் …… கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் …… பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் …… பெருமாளே.