திருப்புகழ் பாடல் 32 – Thiruppugazh Song 32 – இருகுழை யெறிந்த கெண்டைகள்: Irukuzhai Yerintha Kendaikal

திருப்புகழ் பாடல் 32 – திருச்செந்தூர்

தனதன தனந்த தந்தன தனதன தனந்த தந்தன
தனதன தனந்த தந்தன …… தனதான

இருகுழை யெறிந்த கெண்டைகள் ஒருகுமி ழடர்ந்து வந்திட
இணைசிலைநெ ரிந்தெ ழுந்திட …… அணைமீதே

இருளளக பந்தி வஞ்சியி லிருகலையு டன்கு லைந்திட
இதழமுத ருந்த சிங்கியின் …… மனமாய

முருகொடுக லந்த சந்தனஅளருபடு குங்கு மங்கமழ்
முலைமுகடு கொண்டெ ழுந்தொறு …… முருகார

முழுமதிபு ரிந்த சிந்துர அரிவையரு டன்க லந்திடு
முகடியுந லம்பி றந்திட …… அருள்வாயே

எரிவிடநி மிர்ந்த குஞ்சியி னிலவொடு மெழுந்த கங்கையு
மிதழியொட ணிந்த சங்கரர் …… களிகூரும்

இமவரைத ருங்க ருங்குயில் மரகதநி றந்த ருங்கிளி
யெனதுயிரெ னுந்த்ரி யம்பகி …… பெருவாழ்வே

அரைவட மலம்பு கிண்கிணி பரிபுர நெருங்கு தண்டைக
ளணிமணிச தங்கை கொஞ்சிட …… மயில்மேலே

அகமகிழ்வு கொண்டு சந்ததம் வருகுமர முன்றி லின்புறம்
அலைபொருத செந்தில் தங்கிய …… பெருமாளே.