திருப்புகழ் பாடல் 34 – Thiruppugazh Song 34 – உததியறல் மொண்டு: Uthathiyaral Mondu

திருப்புகழ் பாடல் 34 – திருச்செந்தூர்
ராகம் – கீரவாணி; தாளம் – அங்கதாளம் (6 1/2)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1

தனதனன தந்த தானதன
தனதனன தந்த தானதன
தனதனன தந்த தானதன …… தந்ததான

உததியறல் மொண்டு சூல்கொள்கரு
முகிலெனஇ ருண்ட நீலமிக
வொளிதிகழு மன்றல் ஓதிநரை …… பஞ்சுபோலாய்

உதிரமெழு துங்க வேலவிழி
மிடைகடையொ துங்கு பீளைகளு
முடைதயிர்பி திர்ந்த தோஇதென …… வெம்புலாலாய்

மதகரட தந்தி வாயினிடை
சொருகுபிறை தந்த சூதுகளின்
வடிவுதரு கும்ப மோதிவளர் …… கொங்கைதோலாய்

வனமழியு மங்கை மாதர்களின்
நிலைதனையு ணர்ந்து தாளிலுறு
வழியடிமை யன்பு கூருமது …… சிந்தியேனோ

இதழ்பொதிய விழ்ந்த தாமரையின்
மணவறைபு குந்த நான்முகனும்
எறிதிரைய லம்பு பாலுததி …… நஞ்சராமேல்

இருவிழிது யின்ற நாரணனும்
உமைமருவு சந்த்ர சேகரனும்
இமையவர்வ ணங்கு வாசவனும் …… நின்றுதாழும்

முதல்வசுக மைந்த பீடிகையில்
அகிலசக அண்ட நாயகிதன்
மகிழ்முலைசு ரந்த பாலமுத …… முண்டவேளே

முளைமுருகு சங்கு வீசியலை
முடுகிமைத வழ்ந்த வாய்பெருகி
முதலிவரு செந்தில் வாழ்வுதரு …… தம்பிரானே.