திருப்புகழ் பாடல் 36 – Thiruppugazh Song 36 – ஏவினை நேர்விழி: Yevinai Nervizhi

திருப்புகழ் பாடல் 36 – திருச்செந்தூர்
ராகம் – வலஜி / பந்துவராளி; தாளம் – ஆதி
(எடுப்பு – 3/4 இடம்)

தானன தானன தானன தானன
தானன தானன …… தனதானா

ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை …… நெறிபேணா

ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை மோழையை …… அகலாநீள்

மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை …… யிகழாதே

மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது …… மொருநாளே

நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் …… குறமாதை

நாடியெ கானிடை கூடிய சேவக
நாயக மாமயி …… லுடையோனே

தேவிம நோமணி ஆயிப ராபரை
தேன்மொழி யாள்தரு …… சிறியோனே

சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
சீரலை வாய்வரு …… பெருமாளே.