திருப்புகழ் பாடல் 37 – Thiruppugazh Song 37 – ஓரா தொன்றைப் பாரா: Ooratha Ondrai Paara

திருப்புகழ் பாடல் 37 – திருச்செந்தூர்
ராகம் – பிலஹரி; தாளம் – ஆதி – 2 களை

தானா தந்தத் தானா தந்தத்
தானா தந்தத் …… தனதானா

ஓரா தொன்றைப் பாரா தந்தத்
தோடே வந்திட் …… டுயிர்சோர

ஊடா நன்றற் றார்போல் நின்றெட்
டாமால் தந்திட் …… டுழல்மாதர்

கூரா வன்பிற் சோரா நின்றக்
கோயா நின்றுட் …… குலையாதே

கோடார் செம்பொற் றோளா நின்சொற்
கோடா தென்கைக் …… கருள்தாராய்

தோரா வென்றிப் போரா மன்றற்
றோளா குன்றைத் …… தொளையாடீ

சூதா யெண்டிக் கேயா வஞ்சச்
சூர்மா அஞ்சப் …… பொரும்வேலா

சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச்
சேவா றெந்தைக் …… கினியோனே

தேனே யன்பர்க் கேயா மின்சொற்
சேயே செந்திற் …… பெருமாளே.