திருப்புகழ் பாடல் 50 – Thiruppugazh Song 50 – கொங்கைகள் குலுங்க: Kongaikal Kulunga

திருப்புகழ் பாடல் 50 – திருச்செந்தூர்

தந்ததன தந்ததன தந்ததன தந்ததன
தந்ததன தந்ததன …… தந்ததான

கொங்கைகள்கு லுங்கவளை செங்கையில்வி ளங்கஇருள்
கொண்டலைய டைந்தகுழல் …… வண்டுபாடக்

கொஞ்சியவ னங்குயில்கள் பஞ்சநல்வ னங்கிளிகள்
கொஞ்சியதெ னுங்குரல்கள் …… கெந்துபாயும்

வெங்கயல்மி ரண்டவிழி அம்புலிய டைந்தநுதல்
விஞ்சையர்கள் தங்கள்மயல் …… கொண்டுமேலாய்

வெம்பிணியு ழன்றபவ சிந்தனைநி னைந்துனது
மின்சரண பைங்கழலொ …… டண்டஆளாய்

சங்கமுர சந்திமிலை துந்தமித தும்பவளை
தந்தனத னந்தவென …… வந்தசூரர்

சங்கைகெட மண்டிதிகை யெங்கிலும டிந்துவிழ
தண்கடல்கொ ளுந்தநகை …… கொண்டவேலா

சங்கரனு கந்தபரி வின்குருவெ னுஞ்சுருதி
தங்களின்ம கிழ்ந்துருகு …… மெங்கள்கோவே

சந்திரமு கஞ்செயல்கொள் சுந்தரகு றம்பெணொடு
சம்புபுகழ் செந்தில்மகிழ் …… தம்பிரானே.