திருப்புகழ் பாடல் 100 – திருச்செந்தூர்
ராகம் – யமுனா கல்யாணி; தாளம் – மிஸ்ரசாபு (3 1/2)
தகதிமி-2, தகிட-1 1/2
தந்தன தான தந்தன தான
தந்தன தான …… தனதான
விந்ததி னுறி வந்தது காயம்
வெந்தது கோடி …… யினிமேலோ
விண்டுவி டாம லுன்பத மேவு
விஞ்சையர் போல …… அடியேனும்
வந்துவி நாச முன்கலி தீர
வண்சிவ ஞான …… வடிவாகி
வன்பத மேறி யென்களை யாற
வந்தருள் பாத …… மலர்தாராய்
எந்தனு ளேக செஞ்சுட ராகி
யென்கணி லாடு …… தழல்வேணி
எந்தையர் தேடு மன்பர்ச காய
ரெங்கள் சுவாமி …… யருள்பாலா
சுந்தர ஞான மென்குற மாது
தன்றிரு மார்பி …… லணைவோனே
சுந்தர மான செந்திலில் மேவு
கந்தசு ரேசர் …… பெருமாளே.