திருப்புகழ் பாடல் 107 – பழநி
ராகம் – சக்ரவாஹம்; தாளம் – அங்கதாளம் (8) (எடுப்பு 1/2 தள்ளி)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக-1, தகதிமிதக-3
தனதான தந்தனத் …… தனதான
அபகார நிந்தைபட் …… டுழலாதே
அறியாத வஞ்சரைக் …… குறியாதே
உபதேச மந்திரப் …… பொருளாலே
உனைநானி னைந்தருட் …… பெறுவேனோ
இபமாமு கன்தனக் …… கிளையோனே
இமவான்ம டந்தையுத் …… தமிபாலா
ஜெபமாலை தந்தசற் …… குருநாதா
திருவாவி னன்குடிப் …… பெருமாளே.