திருப்புகழ் பாடல் 109 – பழநி
ராகம் – பிலஹரி ; தாளம் – அங்கதாளம் (10 1/2)
தகிட-1 1/2 தகதிமி-2, தகதிமி-2,
தகதிமி-2, தகதிமிதக-3
(எடுப்பு – அதீதம்)
தனத்த தானன தனதன தனதன …… தனதான
அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு …… முறவோரும்
அடுத்த பேர்களு மிதமுறு மகவோடு …… வளநாடும்
தரித்த வூருமெ யெனமன நினைவது …… நினையாதுன்
தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது …… தருவாயே
எருத்தி லேறிய இறையவர் செவிபுக …… வுபதேசம்
இசைத்த நாவின இதணுறு குறமக …… ளிருபாதம்
பரித்த சேகர மகபதி தரவரு …… தெய்வயானை
பதிக்கொ ளாறிரு புயபழ நியிலுறை …… பெருமாளே.