திருப்புகழ் பாடல் 122 – பழநி
ராகம் – ஸெளராஷ்டிரம்; தாளம் – அங்கதாளம் (8 1/2)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தகதிமிதக-3
தனதனன தான தந்த …… தனதான
உலகபசு பாச தொந்த …… மதுவான
உறவுகிளை தாயர் தந்தை …… மனைபாலர்
மலசலசு வாச சஞ்ச …… லமதாலென்
மதிநிலைகெ டாம லுன்ற …… னருள்தாராய்
சலமறுகு பூளை தும்பை …… யணிசேயே
சரவணப வாமு குந்தன் …… மருகோனே
பலகலைசி வாக மங்கள் …… பயில்வோனே
பழநிமலை வாழ வந்த …… பெருமாளே.