திருப்புகழ் பாடல் 123 – பழநி
ராகம் – பேகடா; தாளம் – அங்கதாளம் (11)
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2
தகிட-1 1/2, தகதிமிதக-3
தனதனன தனதனன தானத் தானத் …… தனதான
ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் …… துணரேனே
உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் …… தறியேனே
பெருபுவி லுயர்வரிய வாழ்வைத் தீரக் …… குறியேனே
பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத் …… தவிரேனோ
துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப் …… பெருமாளே
தொழுதுவழி படுமடியர் காவற் காரப் …… பெருமாளே
விருதுகவி விதரணவி நோதக் காரப் …… பெருமாளே
விறன்மறவர் சிறுமிதிரு வேளைக் காரப் …… பெருமாளே.