Thiruppugazh Song 127 – திருப்புகழ் பாடல் 127

திருப்புகழ் பாடல் 127 – பழநி
ராகம் – தந்யாஸி ; தாளம் – ஆதி

தனன தனதனன தனன தனதனன
தனன தனதனன …… தனதான

கடலை பொரியவரை பலகனி கழைநுகர்
கடின குடவுதர …… விபாணத

கரட தடமுமத நளின சிறுநயன
கரிணி முகவரது …… துணைவோனே

வடவ ரையின்முகடு அதிர வொருநொடியில்
வலம்வரு மரகத …… மயில்வீரா

மகபதி தருசுதை குறமினொ டிருவரு
மருவு சரசவித …… மணவாளா

அடல சுரர்கள்குல முழுது மடியவுய
ரமரர் சிறையைவிட …… எழில்மீறும்

அருண கிரணவொளி யொளிரு மயிலைவிடு
மரகர சரவண …… பவலோலா

படல வுடுபதியை யிதழி யணிசடில
பசுபதி வரநதி …… அழகான

பழநி மலையருள்செய் மழலை மொழிமதலை
பழநி மலையில்வரு …… பெருமாளே.