Thiruppugazh Song 143 – திருப்புகழ் பாடல் 143

திருப்புகழ் பாடல் 143 – பழநி

தனனா தனந்தனத் தனனா தனந்தனத்
தனனா தனந்தனத் …… தனதான

கனமா யெழுந்துவெற் பெனவே யுயர்ந்துகற்
புரமா ரணந்துளுத் …… திடுமானார்

கனிவா யுகந்துசிக் கெனவே யணைந்துகைப்
பொருளே யிழந்துவிட் …… டயர்வாயே

மனமே தளர்ந்துவிக் கலுமே யெழுந்துமட்
டறவே யுலந்துசுக் …… கதுபோலே

வசமே யழிந்துவுக் கிடுநோய் துறந்துவைப்
பெனவே நினைந்துனைப் …… புகழ்வேனோ

புனவேடர் தந்தபொற் குறமாது இன்புறப்
புணர்காதல் கொண்டஅக் …… கிழவோனே

புனலேழு மங்கவெற் பொடுசூர் சிரங்கள்பொட்
டெழவே லெறிந்தவுக் …… கிரவீரா

தினமேவு குங்குமப் புயவாச கிண்கிணிச்
சிறுகீத செம்பதத் …… தருளாளா

சிவலோக சங்கரிக் கிறைபால பைங்கயத்
திருவா வினன்குடிப் …… பெருமாளே.