திருப்புகழ் பாடல் 146 – பழநி
ராகம் – கேதார கெளளை; தாளம் – மிஸ்ர சாபு (3 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2
தனன தனதன தனன தனதன
தனன தனதன தனன தனதன
தனன தனதன தனன தனதன …… தனதான
குருதி மலசல மொழுகு நரகுட
லரிய புழுவது நெளியு முடல்மத
குருபி நிணசதை விளையு முளைசளி …… யுடலுடே
குடிக ளெனபல குடிகை வலிகொடி
குமர வலிதலை வயிறு வலியென
கொடுமை யெனபிணி கலக மிடுமிதை …… யடல்பேணி
மருவி மதனனுள் கரிய புளகித
மணிய சலபல கவடி மலர்புனை
மதன கலைகொடு குவடு மலைதனில் …… மயலாகா
மனது துயரற வினைகள் சிதறிட
மதன பிணியொடு கலைகள் சிதறிட
மனது பதமுற வெனது தலைபத …… மருள்வாயே
நிருதர் பொடிபட அமரர் பதிபெற
நிசித அரவளை முடிகள் சிதறிட
நெரிய கிரிகட லெரிய வுருவிய …… கதிர்வேலா
நிறைய மலர்பொழி யமரர் முநிவரும்
நிருப குருபர குமர சரணென
நெடிய முகிலுடல் கிழிய வருபரி …… மயிலோனே
பருதி மதிகனல் விழிய சிவனிட
மருவு மொருமலை யரையர் திருமகள்
படிவ முகிலென அரியி னிளையவ …… ளருள்பாலா
பரம கணபதி யயலின் மதகரி
வடிவு கொடுவர விரவு குறமக
ளபய மெனவணை பழநி மருவிய …… பெருமாளே.