Thiruppugazh Song 182 – திருப்புகழ் பாடல் 182

திருப்புகழ் பாடல் 182 – பழநி
ராகம் – கேதாரகெளளை; தாளம் – அங்கதாளம் (5 1/2)
(எடுப்பு 1/2 தள்ளி)
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2

தனத்ததன தான தந்த தனத்ததன தான தந்த
தனத்ததன தான தந்த …… தனதான

மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்து
வகைக்குமநு நூல்வி தங்கள் …… தவறாதே

வகைப்படிம னோர தங்கள் தொகைப்படியி னாலி லங்கி
மயக்கமற வேத முங்கொள் …… பொருள்நாடி

வினைக்குரிய பாத கங்கள் துகைத்துவகை யால்நி னைந்து
மிகுத்தபொரு ளாக மங்கள் …… முறையாலே

வெகுட்சிதனை யேது ரந்து களிப்பினுட னேந டந்து
மிகுக்குமுனை யேவ ணங்க …… வரவேணும்

மனத்தில்வரு வோனெ என்று னடைக்கலம தாக வந்து
மலர்ப்பதம தேப ணிந்த …… முநிவோர்கள்

வரர்க்குமிமை யோர்க ளென்பர் தமக்குமன மேயி ரங்கி
மருட்டிவரு சூரை வென்ற …… முனைவேலா

தினைப்புனமு னேந டந்து குறக்கொடியை யேம ணந்து
செகத்தைமுழு தாள வந்த …… பெரியோனே

செழித்தவள மேசி றந்த மலர்ப்பொழில்க ளேநி றைந்த
திருப்பழநி வாழ வந்த …… பெருமாளே.