Thiruppugazh Song 188 – திருப்புகழ் பாடல் 188

திருப்புகழ் பாடல் 188 – பழநி
ராகம் – பேஹாக்; தாளம் – திஸ்ர த்ருபுடை (7)

தானந்தன தானன தானன
தானந்தன தானன தானன
தானந்தன தானன தானன …… தனதான

மூலங்கிள ரோருரு வாய்நடு
நாலங்குல மேனடு வேரிடை
மூள்பிங்கலை நாடியொ டாடிய …… முதல்வேர்கள்

மூணும்பிர காசம தாயொரு
சூலம்பெற வோடிய வாயுவை
மூலந்திகழ் தூண்வழி யேயள …… விடவோடிப்

பாலங்கிள ராறுசி காரமொ
டாருஞ்சுட ராடுப ராபர
பாதம்பெற ஞானச தாசிவ …… மதின்மேவிப்

பாடுந்தொனி நாதமு நூபுர
மாடுங்கழ லோசையி லேபரி
வாகும்படி யேயடி யேனையும் …… அருள்வாயே

சூலங்கலை மான்மழு வோர்துடி
வேதன்தலை யோடும ராவிரி
தோடுங்குழை சேர்பர னார்தரு …… முருகோனே

சூரன்கர மார்சிலை வாளணி
தோளுந்தலை தூள்பட வேஅவர்
சூளுங்கெட வேல்விடு சேவக …… மயில்வீரா

காலின்கழ லோசையு நூபுர
வார்வெண்டைய வோசையு மேயுக
காலங்களி னோசைய தாநட …… மிடுவோனே

கானங்கலை மான்மக ளார்தமை
நாணங்கெட வேயணை வேள்பிர
காசம்பழ னாபுரி மேவிய …… பெருமாளே.