Thiruppugazh Song 192 – திருப்புகழ் பாடல் 192

திருப்புகழ் பாடல் 192 – பழநி
ராகம் – ரஞ்சனி ; தாளம் – அங்கதாளம் (7)
(சதுஸ்ர ஜம்பை) /40
தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2 தகதிமிதக-3

தனதனன தாத்த …… தனதான

வசன மிக வேற்றி …… மறவாதே
மனதுதுய ராற்றி …… லுழலாதே

இசைபயில்ஷ டாஷ …… ரமதாலே
இகபரசெள பாக்ய …… மருள்வாயே

பசுபதிசி வாக்ய …… முணர்வோனே
பழநிமலை வீற்ற …… ருளும்வோலா

அசுரர்கிளை வாட்டி …… மிகவாழ
அமரர்சிறை மீட்ட …… பெருமாளே