திருப்புகழ் பாடல் 210- சுவாமி மலை
தனதனன தந்த தான தனதனன தந்த தான
தனதனன தந்த தான …… தனதான
கதிரவனெ ழுந்து லாவு திசையளவு கண்டு மோது
கடலளவு கண்டு மாய …… மருளாலே
கணபணபு யங்க ராஜன் முடியளவு கண்டு தாள்கள்
கவினறந டந்து தேயும் …… வகையேபோய்
இதமிதமி தென்று நாளு மருகருகி ருந்து கூடு
மிடமிடமி தென்று சோர்வு …… படையாதே
இசையொடுபு கழந்த போது நழுவியப்ர சண்டர் வாச
லிரவுபகல் சென்று வாடி …… யுழல்வேனோ
மதுகரமி டைந்து வேரி தருநறவ முண்டு பூக
மலர்வளநி றைந்த பாளை …… மல்ருடே
வகைவகையெ ழுந்த சாம வதிமறைவி யந்து பாட
மதிநிழலி டுஞ்சு வாமி …… மலைவாழ்வே
அதிரவரு சண்ட வாயு வெனவருக ருங்க லாப
அணிமயில்வி ரும்பி யேறு …… மிளையோனே
அடைவொடுல கங்கள் யாவு முதவிநிலை கண்ட பாவை
அருள்புதல்வ அண்ட ராஜர் …… பெருமாளே.