Thiruppugazh Song 293 – திருப்புகழ் பாடல் 293

திருப்புகழ் பாடல் 293 – திருத்தணிகை

தனத்த தனதன தனத்த தனதன
தனத்த தனதன …… தனதான

முடித்த குழலினர் வடித்த மொழியினர்
முகத்தி லிலகிய …… விழியாலும்

முலைக்கி ரிகள்மிசை யசைத்த துகிலினும்
இளைத்த இடையினு …… மயலாகிப்

படுத்த அணைதனி லணைத்த அவரொடு
படிக்கு ளநுதின …… முழலாதே

பருத்த மயில்மிசை நினைத்த பொழுதுன
பதத்து மலரிணை …… யருள்வாயே

துடித்து தசமுகன் முடித்த லைகள்விழ
தொடுத்த சரம்விடு …… ரகுராமன்

துகைத்தி வுலகையொ ரடிக்கு ளளவிடு
துலக்க அரிதிரு …… மருகோனே

தடத்து ளுறைகயல் வயற்கு ளெதிர்படு
தழைத்த கதலிக …… ளவைசாயத்

தருக்கு மெழிலுறு திருத்த ணிகையினில்
தழைத்த சரவண …… பெருமாளே.