திருப்புகழ் பாடல் 308 – காஞ்சீபுரம்
ராகம் – நாட்டகுறிஞ்சி; தாளம் – அங்கதாளம் (8 1/2)
தகதிமிதக-3, தகதகிட-2 1/2, தகதிமிதக-3
தானதனத் தனதனன …… தனதான
ஈனமிகுத் துளபிறவி …… யணுகாதே
யானுமுனக் கடிமையென …… வகையாக
ஞானஅருட் டனையருளி …… வினைதீர
நாணமகற் றியகருணை …… புரிவாயே
தானதவத் தினின்மிகுதி …… பெறுவோனே
சாரதியுத் தமிதுணைவ …… முருகோனே
ஆனதிருப் பதிகமரு …… ளிளையோனே
ஆறுதிருப் பதியில்வளர் …… பெருமாளே.