திருப்புகழ் பாடல் 313 – காஞ்சீபுரம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் …… தனதான
தெரியலஞ் செச்சைக் கொத்து முடிக்கும்
பரிதிகந் தத்தைச் சுற்றந டத்துஞ்
சிறைவிடுஞ் சொர்க்கத் துச்சுர ரைக்கங் …… கையில்வாழுஞ்
சிறுவனென் றிச்சைப் பட்டுப ஜிக்கும்
படிபெரும் பத்திச் சித்ரக வித்வஞ்
சிறிதுமின் றிச்சித் தப்பரி சுத்தம் …… பிறவாதே
பரிகரஞ் சுத்தத் தக்கப்ர புத்வம்
பதறியங் கட்டப் பட்டனர் தத்வம்
பலவையுங் கற்றுத் தர்க்கம தத்வம் …… பழியாதே
பரபதம் பற்றப் பெற்றஎ வர்க்கும்
பரவசம் பற்றிப் பற்றற நிற்கும்
பரவ்ரதம் பற்றப் பெற்றிலன் மற்றென் …… துயர்போமோ
சரியுடன் துத்திப் பத்திமு டிச்செம்
பணதரங் கைக்குக் கட்டிய நெட்டன்
தனிசிவன் பக்கத் தற்புதை பற்பந் …… திரிசூலந்
தரிகரும் பொக்கத் தக்கமொ ழிச்சுந்
தரியரும் பிக்கப் பித்தத னத்தந்
தரிசுரும் பிக்குப் பத்ரையெ வர்க்குந் …… தெரியாத
பெரியபண் டத்தைச் சத்திய பித்தன்
பிரிதியுண் கற்புப் பச்சையெ றிக்கும்
ப்ரபையள்தண் டிற்கைப் பத்மம டப்பெண் …… கொடிவாழ்வே
பிரமரண் டத்தைத் தொட்டதொர் வெற்பும்
பிளவிடுஞ் சத்திக் கைத்தல நித்தம்
பெருமிதம் பெற்றுக் கச்சியில் நிற்கும் …… பெருமாளே.