திருப்புகழ் பாடல் 98 – திருச்செந்தூர்
ராகம் – காம்போதி / ஸஹானா; தாளம் – சதுஸ்ர ஜம்பை (7)
தனனா தனந்த …… தனதான
வரியார் கருங்கண் …… மடமாதர்
மகவா சைதொந்த …… மதுவாகி
இருபோ துநைந்து …… மெலியாதே
இருதா ளினன்பு …… தருவாயே
பரிபா லனஞ்செய் …… தருள்வோனே
பரமே சுரன்ற …… னருள்பாலா
அரிகே சவன்றன் …… மருகோனே
அலைவா யமர்ந்த …… பெருமாளே.