குடும்ப ஒற்றுமை ஏற்பட சொல்ல வேண்டிய மந்திரம்

 621 total views,  2 views today

நம் குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகள் தீர்ந்து, குடும்ப நபர்களுக்கிடையே இருக்கும் மனஸ்தாபங்கள், வேற்றுமைகள் நீங்கி ஒற்றுமை ஏற்பட சொல்ல வேண்டிய அற்புத மந்திரம்…

நம் அன்றாட வாழ்வில் பல கஷ்டங்கள், பிரச்னைகளுக்கு இடையே வாழ்கின்றோம். பணி இடத்தில் கஷ்டத்தைக் கூட ஒருவகையில் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் குடும்பத்தில் ஒற்றுமை இல்லாமல் இருப்பவர்களுக்கு மனதளவில் பெரிய பாதிப்பைத் தரும். அப்படி குடும்ப நபர்களிடையே இருக்கும் வேற்றுமை கலைந்து ஒற்றுமை ஏற்படக் கீழே குறிப்பிட்டுள்ள ஸ்லோகத்தை வெள்ளிக்கிழமைகளில் அல்லது உங்களால் முடியும் போதெல்லாம் சொல்லி வர குடும்ப ஒற்றுமை மேம்படக் கூடிய அருள் கிடைக்கும்…

குடும்ப ஒற்றுமைக்கான மந்திரம்

மஹாதேவீம் மஹாசக்திம் பவானீம்பவவல்லபாம்பவார்திபஞ்ஜநகரீம்வந்தே த்வாம் லோகமாதரம்ஜகத்கர்த்ரீம்ஜகத்தாத்ரீம் ஜகத்ஸம்ஹாரகாரிணீம்முனிபி:ஸமஸ்துதாம் பத்ராம் வந்தேத்வாம் மோக்ஷதாயினீம்.

பர்வதி மந்திரம்

ஸ்லோகத்திற்கான பொருள்:

மகாதேவனுடைய மனைவியான பார்வதி தேவியே, மிக சக்தி வாய்ந்தவளே. பவானி என அழைக்கப்படுபவளே

பக்தர்களின் குடும்ப வாழ்வில் ஏற்படும் மனத்துயர்களை ஓடோடி வந்து போக்குபவளே

அனைத்து லோகங்களுக்கும் தாயானவளே, உங்களை வணங்குகிறேன்.

உலகத்தைப் படைத்து, படைத்ததைக் காப்பவளே, கடைசியில் அதனையும் அழிக்கவும் செய்பவளே

முனிவர்களால் போற்றி துதிக்கப்படும் தேவியே, பக்தர்களுக்கு மங்கலத்தை அருள்பவளே

மிகப்பெரிய வரமான முக்தியை அருள வல்லவளே, தங்களை வணங்குகிறேன்.