திருப்புகழ் பாடல் 13 – Thiruppugazh Song 13 – கந்தனென் றென்றுற்றுனைநாளும்

திருப்புகழ் பாடல் 13 – திருப்பரங்குன்றம்
ராகம் – ஹிந்தோளம் ; தாளம் – அங்கதாளம் (7 1/2)
தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3

தந்தனந் தத்தத் …… தனதான

சந்ததம் பந்தத் …… தொடராலே
சஞ்சலந் துஞ்சித் …… திரியாதே

கந்தனென் றென்றுற் …… றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் …… றிடுவேனோ

தந்தியின் கொம்பைப் …… புணர்வோனே
சங்கரன் பங்கிற் …… சிவைபாலா

செந்திலங் கண்டிக் …… கதிர்வேலா
தென்பரங் குன்றிற் …… பெருமாளே.