நீலிமலை நிர்மலனே சாமியே சரணமய்யா – Neelimalai Nirmalane Saranam

7,602 total views, 78 views today

நீலிமலை நிர்மலனே சாமியே சரணமய்யா!
நீல ஆடை தரிப்பவனே சாமியே சரணமய்யா!
பம்பையில் பிறந்தவனே சாமியே சரணமய்யா!
பக்தர்களின் பரந்தாமனே சாமியே சரணமய்யா!

புஷ்பாலங்காரப் பிரியனே சாமியே சரணமய்யா!
பூங்காவன பூபாலனே சாமியே சரணமய்யா!
கண்கண்ட தெய்வமே சாமியே சரணமய்யா!
கருமவினையை அகற்றுபவனே சாமியே சரணமய்யா!

நமச்சிவாயப் பொருளே சாமியே சரணமய்யா!
நாராயண மூர்த்தியே சாமியே சரணமய்யா!
மலைமகள் மகனே சாமியே சரணமய்யா!
மகிமைகள் அருள்பவனே சாமியே சரணமய்யா!

புலிமீது அமர்ந்தவனே சாமியே சரணமய்யா!
புவிகாக்க வந்தவனே சாமியே சரணமய்யா!
இருமுடித் தலைவனே சாமியே சரணமய்யா!
இணையிலா இறைவனே சாமியே சரணமய்யா!

அற்புதம் புரிபவனே சாமியே சரணமய்யா!
அனைத்தும் ஆனவனே சாமியே சரணமய்யா!
சாமியே சரணமய்யா! ஐயனே சரணமய்யா!
ஐயன் ஐயப்பனே சரணமய்யா!!

Please follow and like us:
error