பச்சைமலை வாழுகின்ற செம்பவளமேனி – Pachai Malai Vazhukindra

பச்சைமலை வாழுகின்ற செம்பவளமேனி
ஐயா செம்பவள மேனி
பிச்சை கொள்வோம் அவனருளை
சாமியெல்லாம் கூடி அவன்
திருப்புகழைப் பாடி
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா!

இச்சையெல்லாம் அறுத்தெறியும்
ஐயப்பனை நாடி நம்
உச்சிதனை திருவடியில் வைத்து
வணங்கி பாடி
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா!

மெய்யான அன்போடு
நெய்விளக்கை ஏற்றி நல்ல
மெய்ஞான நெறிகாண
பக்தியோடு போற்றி
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா!

இருமுடியை இறுக்கித்தானே
இருகரங்கள் பிடிக்க உன்
திருவடியை எப்போதும்
எங்கள் மனம் நினைக்க
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா!

அன்புடனே அடியார்கள்
ஆசையோடு உன்முகத்தை
காணத் தேடி வருவார்
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா!

செல்லுகின்ற பாதையெல்லாம்
கல்லும் முள்ளும் உண்டு அந்த
கல்லும் முள்ளும் கால்களுக்கு
அல்லி மலர்ச் செண்டு
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா!

ஐயப்பாசரணம் என்றே
அனுதினமும் துதித்து
அருள் ஒளிரும் உன்முகத்தை
நெஞ்சினிலே வைத்து
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா!

அச்சம் தரும் மிருகமெல்லாம்
அஞ்சி ஓடி ஒளியும்
இச்சையும் தான் மிருகத்தைப்போல்
ஓடி ஒளிந்து தொலையும்
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா!

தேவர் குறை தீர்த்து வைத்த
ஏகநாதன் புதல்வா நீ
எங்கள் குறையும் நீக்க வேண்டும்
மேகவர்ணன் புதல்வா!
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா!

நெஞ்சகத்தின் வஞ்சகத்தை
நீக்கமறக் களைவாய்
தஞ்சமென்று உன்மலைக்கே
வந்துவிட்டோம் தலைவா!
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா!!