திருப்புகழ் பாடல் 16 – Thiruppugazh Song 16 – பதித்த செஞ்சந்த: Pathiththa Senjanthanam

திருப்புகழ் பாடல் 16 – திருப்பரங்குன்றம்

தனத்ததந் தந்தத் தத்தன தத்தந்
தனத்ததந் தந்தத் தத்தன தத்தந்
தனத்ததந் தந்தத் தத்தன தத்தந் …… தனதான

பதித்தசெஞ் சந்தப் பொற்குட நித்தம்
பருந்துயர்ந் தண்டத் திற்றலை முட்டும்
பருப்பதந் தந்தச் செப்பவை ஒக்குந் …… தனபாரம்

படப்புயங் கம்பற் கக்குக டுப்பண்
செருக்குவண் டம்பப் பிற்கயல் ஒக்கும்
பருத்தகண் கொண்டைக் கொக்குமி ருட்டென் …… றிளைஞோர்கள்

துதித்துமுன் கும்பிட் டுற்றது ரைத்தன்
புவக்கநெஞ் சஞ்சச் சிற்றிடை சுற்றுந்
துகிற்களைந் தின்பத் துர்க்கம் அளிக்கும் …… கொடியார்பால்

துவக்குணும் பங்கப் பித்தன வத்தன்
புவிக்குளென் சிந்தைப் புத்திம யக்கந்
துறக்கநின் தண்டைப் பத்மமெ னக்கென் …… றருள்வாயே

குதித்துவெண் சங்கத் தைச்சுற வெற்றுங்
கடற்கரந் தஞ்சிப் புக்கஅ ரக்கன்
குடற்சரிந் தெஞ்சக் குத்திவி திர்க்குங் …… கதிர்வேலா

குலக்கரும் பின்சொற் றத்தையி பப்பெண்
தனக்குவஞ் சஞ்சொற் பொச்சையி டைக்குங்
குகுக்குகுங் குங்குக் குக்குகு குக்குங் …… குகுகூகூ

திதித்திதிந் திந்தித் தித்தியெ னக்கொம்
பதிர்த்துவெண் சண்டக் கட்கம்வி திர்த்துந்
திரட்குவிந் தங்கட் பொட்டெழ வெட்டுங் …… கொலைவேடர்

தினைப்புனஞ் சென்றிச் சித்தபெ ணைக்கண்
டுருக்கரந் தங்குக் கிட்டிய ணைத்தொண்
திருப்பரங் குன்றிற் புக்குளி ருக்கும் …… பெருமாளே.