KJ Yesudas Ayyappan Songs – Rosapoo Nanthavaname

ரோசாப்பூ நந்தவனமே
தங்க ராசாவே கண் வளராய்
கோகில இசைகுயில்தான் உனக்கு
தாலாட்டு பாடுதய்யா

மடிமேல் கண்வளராய் ஐயப்பன்
புலிப்பால் கொடுக்கும் ஐயா

சபரிமலை சுவாமி
சபரிமலை சுவாமி
கண் திறந்து பார்த்துப்புட்டா
சிரிச்சா முத்துதிரும்
சிந்திச்சா வாழ்வுயரும்
ரோசாப்பூ … ரோசாப்பூ …

ரோசாப்பூ நந்தவனமே
தங்க ராசாவே கண் வளராய்
கோகில இசைகுயில்தான் உனக்கு
தாலாட்டு பாடுதய்யா
என் ஐயா பொன் ஐயா ராசா
என் ஐயா பொன் ஐயப்ப ராசா
என் ஐயா பொன் ஐயா ராசா
என் ஐயா பொன் ஐயப்ப ராசா

அகரத்தில் தொடங்கியே
அனைத்தயும் கத்துக்கிட்டு
பக்தியும் தெரிஞ்சுக்கிட்டு
பகவானை வழிபடைய்யா
ஐயன் படி பதினெட்டும்
உன் வாழ்வில் ஏற்றம் தரும்
அருள்பொங்கும் பார்வை பட்டால்
பெருஞ்செல்வம் பெருகிடுமே

உன்னை பெத்தவர்கள் மகிழ்ந்திட
மத்தவரும் வாழ்த்திடவே
என் கண்ணான கண்மணியே
ஐயப்பனை நினை தினமே
சபரிமலை சுவாமி …..
சபரிமலை சாமி
கண் திறந்து பார்த்துப்புட்டா
சிரிச்சா முத்துதிரும்
சிந்திச்சா வாழ்வுயரும்
ரோசாப்பூ ….. ரோசாப்பூ …..

ரோசாப்பூ நந்தவனமே
தங்க ராசாவே கண் வளராய்
கோகில இசைகுயில்தான் உனக்கு
தாலாட்டு பாடுதய்யா
என் ஐயா பொன் ஐயா ராசாவே
என் ஐயா பொன் ஐயப்ப ராசா
என் ஐயா பொன் ஐயா ராசாவே
என் ஐயா பொன் ஐயப்ப ராசா