Thiruppugazh Song 117- திருப்புகழ் பாடல் 117

திருப்புகழ் பாடல் 117 – பழநி

தனதனன தானான தானதன தந்த
தனதனன தானான தானதன தந்த
தனதனன தானான தானதன தந்த …… தனதான

இருகனக மாமேரு வோகளப துங்க
கடகடின பாடீர வாரமுத கும்ப
மிணைசொலிள நீரோக ராசலஇ ரண்டு …… குவடேயோ

இலகுமல ரேவாளி யாகியஅ நங்க
னணிமகுட மோதானெ னாமிகவ ளர்ந்த
இளமுலைமி னார்மோக மாயையில்வி ழுந்து …… தணியாமல்

பெருகியொரு காசேகொ டாதவரை யைந்து
தருவைநிக ரேயாக வேயெதிர்பு கழந்து
பெரியதமி ழேபாடி நாடொறுமி ரந்து …… நிலைகாணாப்

பிணியினக மேயான பாழுடலை நம்பி
உயிரையவ மாய்நாடி யேபவநி ரம்பு
பிறவிதனி லேபோக மீளவுமு ழன்று …… திரிவேனோ

கருணையுமை மாதேவி காரணிய நந்த
சயனகளி கூராரி சோதரிபு ரந்த
கடவுளுடன் வாதாடு காளிமலை மங்கை …… யருள்பாலா

கருடனுடன் வீறான கேதானம்வி ளங்கு
மதிலினொடு மாமாட மேடைகள்து லங்கு
கலிசைவரு காவேரி சேவகனொ டன்பு …… புரிவோனே

பரவையிடை யேபாத காசுரர்வி ழுந்து
கதறியிட வேபாக சாதனனு நெஞ்சு
பலிதமென வேயேக வேமயிலில் வந்த …… குமரேசா

பலமலர்க ளேதூவி யாரணந வின்று
பரவியிமை யோர்சூழ நாடொறுமி சைந்து
பழநிமலை மீதோர்ப ராபரனி றைஞ்சு …… பெருமாளே.