Thiruppugazh Song 196 – திருப்புகழ் பாடல் 196

திருப்புகழ் பாடல் 196 – பழநி
ராகம் – ஹம்ஸாநந்தி; தாளம் – ஆதி – 2 களை

தானந் தத்தன தானன தானன
தானந் தத்தன தானன தானன
தானந் தத்தன தானன தானன …… தனதான

வாதம் பித்தமி லாவயி றீளைகள்
சீதம் பற்சனி சூலைம கோதர
மாசங் கட்பெரு மூலவி யாதிகள் …… குளிர்காசம்

மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி
யோடுந் தத்துவ காரர்தொ ணு஡றறு
வாருஞ் சுற்றினில் வாழ்சதி காரர்கள் …… வெகுமோகர்

சூழ்துன் சித்ரக பாயைமு வாசைகொ
டேதுஞ் சற்றுண ராமலே மாயைசெய்
சோரம் பொய்க்குடி லேசுக மாமென …… இதின்மேவித்

தூசின் பொற்சர மோடுக லாயுல
கேழும் பிற்பட வோடிடு மூடனை
தூவஞ் சுத்தடி யாரடி சேரநி …… னருள்தாராய்

தீதந் தித்திமி தீதக தோதிமி
டுடுண் டுட்டுடு டூடுடு டூடுடு
சேசெஞ் செக்கெண தோதக தீகுட …… வெனபேரி

சேடன் சொக்கிட வேலைக டாகமெ
லாமஞ் சுற்றிட வேயசு ரார்கிரி
தீவும் பொட்டெழ வேயனல் வேல்விடு …… மயில்வீரா

வேதன் பொற்சிர மீதுக டாவிந
லீசன் சற்குரு வாயவர் காதினில்
மேவும் பற்றிலர் பேறரு ளோதிய …… முருகோனே

வேஷங் கட்டிபி னேகிம காவளி
மாலின் பித்துற வாகிவி ணோர்பணி
வீரங் கொட்பழ னாபுரி மேவிய …… பெருமாளே.