Thiruppugazh Song 201 – திருப்புகழ் பாடல் 201

திருப்புகழ் பாடல் 201 – சுவாமி மலை
ராகம் – ஜோன்புரி; தாளம் – அங்கதாளம் (18)

தகிடதக-2 1/2, தகிடதக-2 1/2, தகிடதக-2 1/2
தகிடதக-2 1/2, தகதிமி-2, தகதிமி-2, தக-1
தகதிமிதக-3

தனாதன தனாதன தனாதன தனாதன
தனாதனன தானந் …… தனதானா

அவாமரு வினாவசு தைகாணும டவாரெனு
மவார்கனலில் வாழ்வென் …… றுணராதே

அராநுக ரவாதையு றுதேரேக திநாடும
றிவாகியுள மால்கொண் டதனாலே

சிவாயவெ னுநாமமொ ருகாலுநி னையாததி
மிராகரனை வாவென் …… றருள்வாயே

திரோதம லமாறும டியார்கள ருமாதவர்
தியானமுறு பாதந் …… தருவாயே

உவாவினி யகானுவி னிலாவும யில்வாகன
முலாசமுட னேறுங் …… கழலோனே

உலாவுத யபாநுச தகோடியு ருவானவொ
ளிவாகுமயில் வேலங் …… கையிலோனே

துவாதச புயாசல ஷடாநந வராசிவ
சுதாஎயினர் மானன் …… புடையோனே

சுராதிப திமாலய னுமாலொடு சலாமிடு
சுவாமிமலை வாழும் …… பெருமாளே.Thiruppugazh Song 202 – திருப்புகழ் பாடல் 202