Thiruppugazh Song 202 – திருப்புகழ் பாடல் 203

திருப்புகழ் பாடல் 202 – சுவாமி மலை

தானதன தந்த தானன தானதன தந்த தானன
தானதன தந்த தானன …… தனதான

ஆனனமு கந்து தோளோடு தோளிணைக லந்து பாலன
ஆரமுது கண்டு தேனென …… இத்ழுறல்

ஆதரவி னுண்டு வேல்விழி பூசலிட நன்று காணென
ஆனையுர மெங்கு மோதிட …… அபிராம

மானனைய மங்கை மார்மடு நாபியில்வி ழுந்து கீடமில்
மாயுமனு வின்ப வாசைய …… தறவேயுன்

வாரிஜப தங்கள் நாயடி யேன்முடிபு னைந்து போதக
வாசகம்வ ழங்கி யாள்வது …… மொருநாளே

ஈனவதி பஞ்ச பாதக தானவர்ப்ர சண்ட சேனைகள்
ஈடழிய வென்று வானவர் …… குலசேனை

ஏவல்கொளு மிந்த்ர லோகவ சீகரவ லங்க்ரு தாகர
ராசதம றிந்த கோமள …… வடிவோனே

சோனைசொரி குன்ற வேடுவர் பேதைபயில் கின்ற ஆறிரு
தோளுடைய கந்த னேவய …… லியில்வாழ்வே

சூளிகையு யர்ந்த கோபுர மாளிகைபொ னிஞ்சி சூழ்தரு
ஸ்வாமிமலை நின்று லாவிய …… பெருமாளே.