Thiruppugazh Song 214 – திருப்புகழ் பாடல் 214

திருப்புகழ் பாடல் 214- சுவாமி மலை
ராகம் – பிலஹரி; தாளம் – மிஸ்ரசாபு
தகிட-1 1/2, தகதிமி-2

தனன தனதன தனன தனதன
தனன தனதன …… தனதான

குமர குருபர முருக சரவண
குகசண் முககரி …… பிறகான

குழக சிவசுத சிவய நமவென
குரவ னருள்குரு …… மணியேயென்

றமுத இமையவர் திமிர்த மிடுகட
லதென அநுதின …… முனையோதும்

அமலை அடியவர் கொடிய வினைகொடு
மபய மிடுகுர …… லறியாயோ

திமிர எழுகட லுலக முறிபட
திசைகள் பொடிபட …… வருசூரர்

சிகர முடியுடல் புவியில் விழவுயிர்
திறைகொ டமர்பொரு …… மயில்வீரா

நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல்
நதிகொள் சடையினர் …… குருநாதா

நளின குருமலை மருவி யமர்தரு
நவிலு மறைபுகழ் …… பெருமாளே.