Thiruppugazh Song 220 – திருப்புகழ் பாடல் 220

திருப்புகழ் பாடல் 220- சுவாமி மலை

தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த …… தனதான

தருவரிவ ராகு மென்று பொருணசையி னாடி வண்டு
தனைவிடுசொல் தூது தண்ட …… முதலான

சரசகவி மாலை சிந்து கலிதுறைக ளேச லின்ப
தருமுதல தான செஞ்சொல் …… வகைபாடி

மருவுகையு மோதி நொந்து அடிகள்முடி யேதெ ரிந்து
வரினுமிவர் வீத மெங்க …… ளிடமாக

வருமதுவொ போது மென்று வொருபணமு தாசி னஞ்சொல்
மடையரிட மேந டந்து …… மனம்வேறாய்

உருகிமிக வாக வெந்து கவிதைசொலி யேதி ரிந்து
உழல்வதுவு மேத விர்ந்து …… விடவேநல்

உபயபத மால்வி ளங்கி யிகபரமு மேவ இன்ப
முதவியெனை யாள அன்பு …… தருவாயே

குருகினொடு நாரை யன்றில் இரைகளது நாடி டங்கள்
குதிகொளிள வாளை கண்டு …… பயமாகக்

குரைகடல்க ளேய திர்ந்து வருவதென வேவி ளங்கு
குருமலையின் மேல மர்ந்த …… பெருமாளே.