Thiruppugazh Song 268 – திருப்புகழ் பாடல் 268

திருப்புகழ் பாடல் 268 – திருத்தணிகை
ராகம் – நாதநாமக்ரியா; தாளம் – அங்கதாளம் (7 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2

தந்து தானன தனதன தனதன
தந்து தானன தனதன தனதன
தந்து தானன தனதன தனதன …… தனதான

கொந்து வார்குர வடியினு மடியவர்
சிந்தை வாரிஜ நடுவினு நெறிபல
கொண்ட வேதநன் முடியினு மருவியா …… குருநாதா

கொங்கி லேர்தரு பழநியி லறுமுக
செந்தில் காவல தணிகையி லிணையிலி
கொந்து காவென மொழிதர வருசம …… யவிரோத

தந்த்ர வாதிகள் பெறவரி யதுபிறர்
சந்தி யாதது தனதென வருமொரு
சம்ப்ர தாயமு மிதுவென வுரைசெய்து …… விரைநீபச்

சஞ்ச ஡ணகரி கரமுரல் தமனிய
கிண்கி ணீமுக விதபத யுகமலர்
தந்த பேரருள் கனவிலு நனவிலு …… மறவேனே

சிந்து வாரமு மிதழியு மிளநவ
சந்த்ர ரேகையு மரவமு மணிதரு
செஞ்ச டாதரர் திருமக வெனவரு …… முருகோனே

செண்ப காடவி யினுமித ணினுமுயர்
சந்த னாடவி யினுமுறை குறமகள்
செம்பொ னு஡புற கமலமும் வளையணி …… புதுவேயும்

இந்து வாண்முக வனசமு ம்ருகமத
குங்கு மாசல யுகளமு மதுரித
இந்த ளாம்ருத வசனமு முறுவலு …… மபிராம

இந்த்ர கோபமு மரகத வடிவமு
மிந்த்ர சாபமு மிருகுழை யொடுபொரு
மிந்த்ர நீலமு மடலிடை யெழுதிய …… பெருமாளே.