Thiruppugazh Song 304 – திருப்புகழ் பாடல் 304

திருப்புகழ் பாடல் 304 – குன்றுதோறாடல்
ராகம் – பேகடா ; தாளம் – மிஸ்ரசாபு (3 1/2)
தகதிமி-2, தகிட-1 1/2

தனதன தனன தனதன தனன
தனதன தனன …… தனதான

எழுதிகழ் புவன நொடியள வதனி
லியல்பெற மயிலில் …… வருவோனே

இமையவர் பரவி யடிதொழ அவுணர்
மடிவுற விடுவ …… தொருவேலா

வழுதியர் தமிழி னொருபொரு ளதனை
வழிபட மொழியு …… முருகேசா

மலரடி பணியு மடமகள் பசலை
மயல்கொடு தளர்வ …… தழகோதான்

முழுகிய புனலி லினமணி தரள
முறுகிடு பவள …… மிகவாரி

முறையொடு குறவர் மடமகள் சொரியு
முதுமலை யழக …… குருநாதா

பழகிய வினைகள் பொடிபட அருளில்
படிபவ ரிதய …… முறுகோவே

பருவரை துணிய வொருகணை தெரிவ
பலமலை யுடைய …… பெருமாளே.