Thiruppugazh Song 307 – திருப்புகழ் பாடல் 307

திருப்புகழ் பாடல் 307 – ஆறு திருப்பதி

தனதன தனதானன தனதன தனதானன
தனதன தனதானன …… தனதான

அலைகடல் நிகராகிய விழிகொடு வலைவீசிகள்
அபகட மகபாவிகள் …… விரகாலே

அதிவித மதராயத நிதமொழி பலகூறிகள்
அசடரொ டுறவாடிகள் …… அநியாயக்

கலைபகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள்
கருதிடு கொடியாருட …… னினிதாகக்

கனதன முலைமேல்விழு கபடனை நி முடனை
கழலிணை பெறவேயினி …… யருள்வாயே

அலைபுனல் தலைசூடிய பசுபதி மகனாகிய
அறுமுக வடிவே அருள் …… குருநாதா

அசுரர்கள் குடியேகெட அமரர்கள் பதியேபெற
அதிரிடும் வடிவேல்விடு …… மதிசூரா

தலையய னறியாவொரு சிவகுரு பரனேயென
தரணியி லடியார்கண …… நினைவாகா

சகலமு முதலாகிய அறுபதி நிலைமேவிய
தடமயில் தனிலேறிய …… பெருமாளே.